2 பட லாபத்தை ஒரே படத்தில் கொடுத்த இயக்குனர் விசு.! ஏவிஎமின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ சீக்ரெட்ஸ்….

Samsaram Adhu Minsaram

இயக்குனர் விசு இயக்கத்தில் கடந்த 1986 -ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “சம்சாரம் அது மின்சாரம்”. இந்த திரைப்படத்தில் விசு ,சந்திரசேகர், லட்சுமி, கிஷ்மு, ரகுவரன், டெல்லி கணேஷ், இளவரசி  உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தார். படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருந்தது.

இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. கிட்டத்தட்ட இந்த திரைப்படம் 25 வாரங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடியது. ஓடியது மட்டுமின்றி படம் இந்த  திரைப்படம் .சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது,  பிலிம்பேர் விருது , மூன்று சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் என வென்று குவித்தது.

இந்நிலையில், இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என அந்த சமயம் யாருமே எதிர்பார்க்கவே இல்லயாம். ஏனென்றால், அந்த சமயம் மிகப்பெரிய திரையரங்கு ஒன்று சென்னையில் இருந்ததாம். படங்கள் பார்க்க வேண்டும் என்றால் அனைவரும் அங்கு தான் வருவார்களாம்.

அதைப்போல, “சம்சாரம் அது மின்சாரம்” திரைப்படத்தை விநோயோகம் செய்த சில தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழு என அனைவரும் படத்தை பார்க்க திரையரங்கில்  முதல் நாளே வந்தார்களாம். ஆனால், படக்குழு மற்றும் தான் அந்த திரையரங்குகளில் இருந்தார்களாம். ஒரு சிலர் மட்டும் தான் இந்த திரைப்படத்தை பார்க்க அந்த திரையரங்கிற்கு வந்தார்களாம்.

இதை போல தான் படம் வெளியான முதல் நாளில் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லையாம் அதைப்போல மக்கள் கூட்டமும் பெரிதாக இந்த திரைப்படத்திற்கு வரவில்லையாம். பிறகு ஏவிஎம் என படத்தில் விளம்பரம் வந்தவுடன் அடுத்ததாக இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்களாம்.

இரண்டாவது நாளில் படத்தை பார்த்தவர்கள் படம் அருமையாக இருப்பதாக மற்றவர்களிடம் தெரிவிக்க உடனடியாக படத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் வசூல் அதிகரித்ததாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 50 லட்சம் வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

படத்தை எடுத்த தயாரிப்பாளர்களுக்கு லாபம், படத்தை விநியோகம் செய்தவர்களுக்கு லாபம் என மிகப்பெரிய வெற்றியானதாக கூறப்படுகிறது. படத்தை விநியோகம் செய்த ஆனந்த சுரேஷிற்கு 2 படத்தை விநியோகம் செய்தால் எந்த அளவிற்கு லாபம் கிடைக்குமோ அதாவது 36லட்சம் வரை லாபம் கிடைத்ததாம். இதன் பிறகு ஆனந்த சுரேஷ் பி விசுக்கு லாபத்தை கொடுத்ததற்கு நன்றி எனவும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை  தகவலை அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்