வெற்றிமாறன் அடுத்த பிளான்.?! விடுதலை எப்போ முடியும்? வாடிவாசல் எப்போ ஆரம்பிக்கும்?

Default Image

ஜனவரி தொடக்கத்தில் விடுதலை ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளதாம். அது முடிந்த பிறகு இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை ஆரம்பிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் யாருடைய பாடத்தை இயக்குகிறார், அவரது படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். காரணம் அவரது, திரைப்படங்கள் தரமானதாகவும், கமர்சியல் அம்சம் கொண்டதாகவும் அனைவரும் ரசித்து வியக்கும் படியும் அமைந்து வருகிறது.

அவரது இயக்கத்தில் சிறிய பட்ஜெட்டாக தொடங்கப்பட்ட விடுதலை தற்போது பெரிய படமாக மாறி வருகிறது. இந்த படத்தில் சூரி முதன்மை நாயகனாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இளையராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சத்தியமங்கலம் போன்ற காட்டுப்பகுதிகளில் நடைபெற்று வந்தது. பின்னர் மழை போன்ற இயற்கை காரணங்களால் படத்தின் ஷூட்டிங் தாமதப்பட்டது. தற்போது படக்குழு மீண்டும் ஷூட்டிங் தொடங்க உள்ளதாம்.

ஏற்கனவே 60 சதவீத ஷூட்டிங் தான் முடிந்துள்ளதாம். மீதம் உள்ள ஷூட்டிங்கிற்கு 40 -50 நாட்கள் தேவைப்படுகிறதாம். அது முடிந்த பிறகு வெற்றிமாறன் அடுத்த வருடம் மத்தியில் வாடிவாசலை ஆரம்பிக்க உள்ளாராம். அதன் பிறகுதான் ராஜன் வகையறா, கமல்ஹாசன் திரைப்படம் என வரிசை நீள்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi