ஒரு வழியா முடிஞ்சது! ‘கோட்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.
இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், சினேகா,பிரபுதேவா, நிதின் சத்யா, பிரேம்ஜி,யோகிபாபு, வைபவ், மைக் மோகன், என இன்னும் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கேரளா, சென்னை மற்றும் ரஷ்யா, துருக்கி ஹைதராபாத் என பல இடங்களில் நடைபெற்றது.
விறு விறுப்பாக நடைபெற்று வந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்ததாக கூறப்பட்டது. படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், தற்போது படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் தான் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் படத்தின் VFX காட்சிகள் தான் படக்குழு மும்மரமாக ஈடுபட்டு வந்தது. ஏனென்றால், படத்தில் விஜய் இளமையான வயதில் இருக்கும் கதாபாத்திரம் ஒன்று VFX மூலம் தான் வருகிறது. எனவே, டீ ஏஜிங் டெக்னாலஜியை படத்தில் பயன்படுத்தபட்டு இதற்கான பணிகள் அமெரிக்காவில் நடைபெற்று வந்தது.
அமெரிக்காவில் உள்ள பிரபல VFX நிறுவனமான ‘லோலா’ என்கிற நிறுவனம் தான் வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது படத்திற்கான VFX வேலைகள் முடிந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஜயின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் ” கோட் VFX காட்சிகள் நிறைவடைந்துவிட்டது. இதனை பார்க்க ஆவலுடன் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை முதல்..இந்தியாவுக்கு வரி விதித்த ட்ரம்ப் வரை!
April 3, 2025
சிக்ஸர் விளாசிய சால்ட்…ஸ்டிக்கை தெறிக்கவிட்ட சிராஜ்..பெங்களூருக்கு எமனாக மாறிய தருணம்!
April 3, 2025