“தெலுங்குல பாகுபலி.. தமிழ்ல கங்குவா..” – இயக்குனர் சுசீந்திரன் பாராட்டு!
தெலுங்கில் பாகுபலி போன்று தமிழில் கங்குவா என்று கங்குவா திரைப்படத்திற்கு இயக்குனர் சுசீந்திரன் பாராட்டியுள்ளார்.

சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த பிரம்மாண்டமான படம் “கங்குவா” கடந்த வாரம் வியாழன் அன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. படம் கலவையான விமர்சனங்கள் குவிந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு மூன்றே நாட்களில் ரூ.127 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்த நிலையில், தொடர் நெகடிவ் விமர்சனம் குவியும் நிலையில், கங்குவா படக்குழுவை வாழ்த்தி இயக்குநர் சுசீந்திரன் ‘X’தளத்தில், “கங்குவா திரைப்படத்தை எனது குழந்தைகளுடன் சென்று பார்த்தேன், மிகவும் ரசித்தேன். எப்படி தெலுங்கில் ‘பாகுபலி’ பிரம்மாண்ட திரைப்படமோ, அதுபோல தமிழில் ‘கங்குவா’ பிரம்மாண்ட திரைப்படம்.
தெலுங்கில் பாகுபலி மாதிரி தமிழில் கங்குவா மிக முக்கியமான படம். இந்தப் படத்தை ஏன் தவறாக சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. சூர்யா சாரின் நடிப்பு, உழைப்பு பிரமிக்க வைக்கிறது, Camera, CG, என அனைத்து சூறைகளிலும் உலகதரத்துக்கு தமிழில் இந்த தங்குவா, தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் காலம் தாழ்த்தி கொண்டாடி விடாதீர்கள்.
அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்த திரைப்படத்தை பாருங்கள், ‘கங்குவா’ உங்களை மகிழ்விப்பான்” என்று இயக்குநர் சுசீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
Thank you, Dir. #Suseenthiran sir for your words of encouragement and support to #Kanguva. We truly appreciate your genuine feedback and support for the film ❤#KanguvaRunningSuccessfully
???? https://t.co/aG93NEBPMQ@Suriya_offl @thedeol @directorsiva @DishPatani @ThisIsDSP… pic.twitter.com/MfYU6m0WMT— Studio Green (@StudioGreen2) November 19, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025