ரஜினிக்கு தெலுங்கில் மார்க்கெட் இல்லை அவரு படம் ஓடவே ஓடாது…பாட்ஷா இயக்குனர் பேச்சு!
Rajinikanth : பாட்ஷா படத்திற்கு முன்னாடி வரை ரஜினிகாந்திற்கு தெலுங்கில் மார்க்கெட் கிடையாது என இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். அவருக்கு தெலுங்கில் பாட்ஷா திரைப்படத்தின் மூலம் தான் மார்க்கெட் மிகவும் உயர்ந்தது. இதனைப் பற்றி சொல்லி தான் தெரிய வேண்டும் என்று இல்லை. ஏனென்றால் பாட்ஷா திரைப்படம் அந்த அளவிற்கு அருமையாக இருக்கும் .
தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ கேங்ஸ்டர் படங்கள் வந்திருக்கிறது. ஆனால், பாட்ஷா திரைப்படத்திற்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் எப்போதுமே இருக்கும் என்றே சொல்லலாம். இந்த நிலையில், பாட்ஷா படம் வெளியாவதற்கு முன்பு வர ரஜினிக்கு தெலுங்கில் மார்க்கெட் இல்லை. அவருடைய படமே தெலுங்கில் ஓடவே ஓடாது என அந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” இந்த பாட்ஷா திரைப்படத்தில் நக்மாவை போட முதலில் காரணமே அவருக்கு தெலுங்கில் மார்க்கெட் இருந்தது தான். இதன் காரணமாக தான் அவரை இந்த படத்தில் நான் நடிக்க வைக்க முயற்சி செய்தேன். அதுமட்டுமின்றி ரஜினிகாந்த் எப்போதுமே பெரிய பெரிய நடிகைகளை தன்னுடைய படத்திற்கு போட வேண்டும் என்று ஆசைப்படுவார்.
பாட்ஷா படம் வெளியாவதற்கு முன்பு வரை அவருக்கு தெலுங்கில் அந்த அளவிற்கு சொல்லும்படி மார்க்கெட் கிடையவே கிடையாது ஆனால் பாட்ஷா படம் வெளியான பிறகு அவருக்கு மார்க்கெட் தனியாக உருவானது அதைப்போல இந்த படத்திற்கு முன்னதாக அவருக்கு தெலுங்கில் படங்களும் ஓட விடாது ஆனால் பாட்ஷா படத்திற்கு பிறகு அது எல்லாம் அப்படியே மறந்து அவருடைய மார்க்கெட்டை வேற லெவல் ஆகிவிட்டது” என சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.