இந்த ஆண்டு இறுதிக்குள் நல்லது நடக்கும்! சங்கமித்ரா குறித்து சுந்தர் சி!

Sangamithra : சங்கமித்ரா திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்படும் என இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்து எடுக்கமுடியாமல் இருக்கும் திரைப்படங்களில் ஒன்று இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருந்த சங்கமித்ரா. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, திஷா பதானி, ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க இருந்தார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வந்த இந்த திரைப்படம் பட்ஜெட் பிரச்சனை காரணமாக எடுக்கப்படாமல் பாதியில் நின்றதாக கூறப்படுகிறது. இருந்தாலும் கண்டிப்பாக இந்த திரைப்படம் உருவாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் சுந்தர் சி கண்டிப்பாக சங்கமித்ரா படம் வரும் என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சங்கமித்ரா படத்தின் மதிப்பு என்னவென்று படத்தில் நடித்தவர்கள் மற்றும் படத்தில் பணியாற்றியவர்களுக்கு கண்டிப்பாகவே தெரியும். அந்த படத்தின் கதை அந்த அளவுக்கு நன்றாக இருக்கும்.
கண்டிப்பாக இந்த வருடம் முடிவதற்குள் ஒரு நல்லது நடக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த படத்தை மீண்டும் எடுக்க நான் ஆவலுடன் காத்து இருக்கிறேன். கண்டிப்பாக இந்த ஆண்டு இறுதியில் படம் தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.” என சுந்தர் சி தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் படத்தை எடுங்க என்று கூறி வருகிறார்கள். மேலும், இயக்குனர் சுந்தர் சி தற்போது அரண்மனை 4- படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் மே 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025