சென்னை : மணிவண்ணன் தன்னை ஒரு முறை கெட்டவார்த்தை போட்டு திட்டியதாக இயக்குனர் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
சினிமாவில் மறக்க முடியாத ஒரு பிரபலத்தில் மணிவண்ணன் ஒருவர் என்று கூறலாம். நடிப்பு, இயக்கம் என இரண்டிலும் 1980,90,2000 சமயத்தில் கலக்கியவர். காமெடியான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, நெகட்டிவ் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதைப்போல குணசித்ர கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திவிடுவார்.
அதைப்போலவே, மணிவண்ணன் அமைதி படை, 24 மணி நேரம், சின்ன தம்பி பெரிய தம்பி, என பல்வேறு படங்களையும் இயக்கி இயக்குனராகவும் பல ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். இப்போது முன்னணி இயக்குனராக இருக்கும் சுந்தர் சி கூட ஆரம்ப காலகட்டத்தில் மணிவண்ணனிடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி அதன்பிறகு தான் இயக்குனர் ஆனார்.
மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தபோது ஒரு முறை சுந்தர் சி அவரிடம் பயங்கரமாக கெட்டவார்த்தை போட்டு திட்டு வாங்கினாராம். உதவி இயக்குனராக பணியாற்றிய படத்தின் படப்பிடிப்பின் போது சாலையில் மாட்டு சாணி இருந்ததாம். அந்த சாணியை மணிவண்ணன் அங்கு இருந்து எடுங்கள் என்று கூறினாராம்.
அதற்கு சுந்தர் சி நம்மளை மணிவண்ணன் சொல்லவில்லை என்று மற்றவர்களிடம் இந்த சாணியை இங்கு இருந்து எடுங்கள் என்று உதவி இயக்குனர் போல பேசினாராம். இதனை பார்த்த மணிவண்ணன் ஏன் மற்றவர்களை சொல்கிறாய் நீ இங்கே தான இருக்கிறாய் நீ எடுக்கமாட்டியா? என்று கெட்டவார்த்தை போட்டு திட்டினாராம். இந்த தகவலை இயக்குனர் சுந்தர் சியே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இதுவரை மணிவண்ணன் 400 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் மற்றும் 50 படங்களை இயக்கியுள்ளார். இப்போது மணிவண்ணன் மண்ணில் இல்லை என்றாலும் கூட அவர் நடித்த படங்கள் எல்லாம் காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே கூறலாம்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…