Rajinikanth : நடிகர் ரஜினிகாந்திற்கு இயக்குனர் ஸ்ரீதர் மறக்க முடியாத பிறந்த நாள் பரிசை கொடுத்துள்ளார்.
பொதுவாகவே பிரபலங்களுக்கு பிறந்த நாள் என்றால் ரசிகர்கள் வாழ்த்து தெரிவிப்பதோடு அந்த பிரபலங்களுடன் படங்களில் பணிபுரிபவர்களும் அந்த பிரபலங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவர்களுக்கு பரிசு கொடுப்பது வழக்கமான ஒன்று. அந்த வகையில் ஒரு முறை ரஜினிகாந்திற்கு பிரபல இயக்குனரான ஸ்ரீதர் ரஜினிகாந்திற்கு மறக்க முடியாத கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார்.
இயக்குனர் ஸ்ரீதர் நடிகர் ரஜினிகாந்தை வைத்து துடிக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த சமயத்தில் சரியாக 1982 டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி கடைசி காட்சி எடுக்கப்பட்டு வந்தது. அந்த காட்சியுடன் படப்பிடிப்பும் மொத்தமாக முடிந்துவிடும் எனவே, காட்சி எல்லாம் முடித்துவிட்டு அனைவரும் ஹோட்டலுக்கு சென்று தங்களுடைய பொருட்களை எடுத்து வைத்து கொண்டு இருந்தார்களாம்.
டிசம்பர் 11-ஆம் தேதி அதற்கு அடுத்த நாள் டிசம்பர் 12 ரஜினியின் பிறந்த நாள். எனவே, அவருடைய பிறந்த நாளுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கவேண்டும் என்று இயக்குனர் ஸ்ரீதர் முடிவு செய்தாராம். டிசம்பர் 12 காலை ரஜினிகாந்த் ரூமில் தூங்கி கொண்டு இருந்தபோது கதைவை யாரோ தட்டினார்களாம். அப்போது துறந்து பார்க்கும்போது ரஜினியின் மனைவி லதா மற்றும் ரஜினியின் மகள் நின்றார்களாம்.
இதனை பார்த்த ரஜினிகாந்த் ஆச்சரியத்தில் மூழ்கி நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? என்று கேட்டாராம். அதன் பின், இயக்குனர் ஸ்ரீதர் நான் தான் அவர்களை வர சொன்னேன். இன்று அனைவரும் ஒன்றாக இணைந்து உங்களுடைய பிறந்த நாளை கொண்டாடப்போகிறோம் என கூறினாராம். அதன்பிறகு கேக் ஏற்பாடு செய்து படப்பிடிப்பு தளத்திலே ரஜினிகாந்த் பிறந்த நாளை கொண்டாடினாராம்.
ரஜினிகாந்த் இதுவரை எத்தனையோ பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். ஆனால், அவருக்கு மறக்க முடியாத வகையில் அமைந்த பிறந்த நாள் இந்த பிறந்த நாள் தானாம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குனர் ஸ்ரீதர் கடந்த 2008 -ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…