ஷங்கர் மகள் திருமணம்…விஜய் இல்லாமல் தனியாக வந்த மனைவி சங்கீதா!

vijay - sangeetha

Vijay Wife: இயக்குனர் ஷங்கர் மகளின் திருமணம் விழாவில் விஜய் இன்றி தனியாக கலந்துகொண்ட சங்கீதா விஜய்யின் புகைப்படம் வைரல்.

பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கர், தருண் கார்த்திகேயன் திருமணம் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நேற்றையை தினம் காலை நடந்து முடிந்த திருமணத்திலும், மாலையில் நடந்த வரவேற்பிலும் தமிழ் திரை நட்சத்திரங்களை தாண்டி மல்லு மற்றும் பொலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்ட நிலையில், இதில் நடிகர் விஜய்யின் மனைவி கலந்து கொண்டதாக தெரிகிறது.

கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணம் விழாவில் விஜய் இன்றி தனியாக கலந்துகொண்ட சங்கீதா விஜய்யின் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக, எந்தவித நிகழ்ச்சியிலும் தனியாக கலந்து கொண்டதும் கிடையாது, விஜய்யுடன் கடந்த காலங்களில் வந்ததில்லை.

sangeetha
sangeetha [file image]
நடிகர் விஜய் ‘The Greatest Of All Time’ படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றுள்ளதால், இயக்குனர் ஷங்கரின் மகள் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால், அவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினரை அனுப்பியதாகவும் மேலும் தம்பதியருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்