இயக்குநர் சசியின் அடுத்த படத்தின் டைட்டில் வெளியானது !!!!!
- பிச்சைகாரன் படத்தை அடுத்து தற்போது இயக்குநர் சசி ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.
- அந்த படத்தின் டைட்டில் “சிவப்பு மஞ்சள் பச்சை” எனவும் அந்த படத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் ஜீ.விபிரகாஷ்குமார் முதலிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.
இயக்குநர் சசி இயக்கத்தில் உருவான திரைபடம் “பிச்சைகாரன்”. இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகை சட்னாதித்டசு நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று சாதனை படைத்தது.
இந்த படம் தெலுங்கு மொழியில் “பிச்சாகடு” என்ற பெயரில் 13 மே 2016 இல் வெளிவந்தது. 2017 இல் இப்படம் “ரோட்சைட் ரவுடி’ என்ற பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தை அடுத்து தற்போது இயக்குநர் சசி ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். அந்த படம் பற்றிய தகவலை இன்று அறிவிக்க இருப்பதாக கூறியுள்ளார்.
அந்த படத்தின் டைட்டில் “சிவப்பு மஞ்சள் பச்சை” எனவும் அந்த படத்தில் நடிகர் சித்தார்த் மற்றும் ஜீ.விபிரகாஷ்குமார் முதலிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.
மேலும் அந்த படத்தில் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்டபணிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.