விஜய்யின் அரசியலுக்கு இது நல்லதல்ல! எஸ்.ஏ.சி. எச்சரிக்கை
SAC: புஸ்ஸி ஆனந்துடனான விஜயின் அரசியல் பயணம் குறித்து எஸ்.ஏ. சந்திரசேகர் அதிருப்தி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். விரைவில் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர மக்கள் பணியில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
விஜய்யின் ரசிகர் மன்ற பணிகளை முன்னின்று செய்து வந்த புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் புஸ்ஸி ஆனந்துடனான விஜயின் அரசியல் பயணம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறும் போது, “பலரும் நான் புஸ்ஸி ஆனந்த் மேல் வேண்டுமென்றே தப்பு சொல்லுகிறேன் என்று நினைக்கலாம், ஆனால் உண்மை என்ன? ஆன்லைன் குரூப் ஒன்றை வைத்திருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். அதில் விஜய்யும் உள்ளார். புஸ்ஸி ஆனந்த் மன்றத்துக்கு வந்தவுடன் வெளியில் உள்ள பெஞ்சின் மேல் சாய்ந்து படுத்துகொள்ளவார்.
பின்னர் நபர் ஒருவரை வைத்து அதனை புகைப்படம் எடுத்து, ஆன்லைன் குரூப்பில் போடுவார். அங்கு போடப்படும் நாடகம் உண்மையாக்கப்படுகிறது. அதாவது, விஜய் அந்த புகைப்படத்தை பார்த்து, “நமக்காக இபபடி உழைத்துவிட்டு கீழ படுத்து தூங்குகிறாரே புஸ்ஸி ஆனந்த் என அவரை அழைத்து அண்ணே நாளையில் இருந்து நீங்கள் என் அறையில் இருங்கள்” என்று சொல்வார்.
இப்படிப்பட்ட நபருடன் இருந்தாரென்றால் நாளை விஜயுடைய எதிர்காலம் என்னவாகும் என்ற பயம் ஒரு தந்தையாக எனக்கு அதிகமாக இருக்கிறது. புஸ்ஸி ஆனந்தின் சகவாசம் விஜய்க்கு நல்லதல்ல என்பதே என் கருத்து” என கூறியுள்ளார்.