எனக்கும் விஜயகாந்துக்கும் பிரச்சனை…அவர் சொன்ன அந்த விஷயம்? மனம் திறந்த ஆர்.கே.செல்வமணி!

vijayakanth and R. K. Selvamani

Vijayakanth கேப்டன் விஜயகாந்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். சினிமா துறையில் இருக்கும் பல பிரபலங்கள் அவரை பற்றி நல்லதாக பேசி தான் நாம் பார்த்திருப்போம். அந்த அளவிற்கு பல உதவிகளையும், மக்களுக்கு பிடித்த படி படங்களையும் விஜயகாந்த் கொடுத்து இருக்கிறார். இந்த மண்ணைவிட்டு அவர் மறைந்தாலும் கூட அவருடைய நினைவுகள் மக்கள் மனதில் அப்படியே இருக்கும்.

read more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை!

விஜயகாந்துடன் பணியாற்றிய அனுபவங்கள் மற்றும் அவருடைய பயணிக்கும் போது நடந்த சம்பவங்களை பற்றி பல பிரபலங்களும் பேசுவது உண்டு. அப்படி தான்  விஜயகாந்தை வைத்து கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார். அதில் தனக்கும் விஜயகாந்திற்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பான விஷயங்களை பற்றியும் அவர் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரையில் நல்ல நடிகர் என்பதற்கு முன்பு நல்ல மனிதர்.

read more- விஜயகாந்தை கோபப்படுத்திய ரவுடிகள்! படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்?

அவரை வைத்து நான் படங்களை இயக்கி இருக்கிறேன். ஒரு முறை எனக்கும் அவருக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. என் மீது அதிகமாக தவறு இருந்தது. அதனை நான் ஒற்றுக்கொள்வேன். அவர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. மனக்கசப்பு ஏற்பட்டவுடன் நான் அவருடன் சில மாதங்கள் பேசவில்லை. அது கோபம் காரணமாக எல்லாம் இல்லை.

read more- தூங்கட்டும் எழுப்பாதீங்க! கறிசோறு போட்டு கேப்டன் விஜயகாந்த் செய்த செயல்?

என்னால் அவரை எப்படி எதிர்கொள்ள முடியும் என்று நான் யோசித்துக்கொண்டே இருந்தேன். இதனாலே அவருடன் பேசமுடியாமல் மாதங்கள் ஓடியது. பிறகு விஜயகாந்தின் திருமணத்தின் போது தான் எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. திருமணத்திற்கு சென்றேன் அங்கு அதிகமாக கூட்டமாக இருந்தது. நிறையவே கூட்டம் இருந்தது.

நான் அவருக்காக கிப்ட் வாங்கி கொண்டு அவரை பார்க்க சென்றேன். அப்போது கூட்ட நெரிசலில் என்னுடைய கிப்ட் கீழே விழுந்துவிட்டது. இதனை பார்த்த விஜயகாந்த் கையை உள்ளே விட்டு என்னை அப்படியே மேடைக்கு தூக்கிவிட்டார். தூக்கிவிடும் போதே யோவ் வழியை விடுங்க என்னுடைய இயக்குனர் இவர் என்று பெருமையாக சொன்னார். பிறகு நான் அவரிடம் சார் கிப்ட் கீழே விழுந்துவிட்டது என்று கூறினேன்.

அதற்கு விஜயகாந்த் நீ எனக்கு பெரிய கிப்ட் தான் என்று கூறினார். இதனை கேட்டவுடன் என்னுடைய உடல் எல்லாம் புல்லரித்து விட்டது. நீண்ட மாதங்கள் நாங்கள் பார்க்கவில்லை ஆனால், அதெல்லாம் மனதில் வைத்து கொள்ளாமல் விஜயகாந்த் அப்படி சொன்னது அவர் மீது இருக்கும் மரியாதையை அதிகமாக்கியது” என்று விஜயகாந்தை பார்த்து வியந்த இயக்குனர் ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்