50 நாள் படம் எடுக்க 3 வருஷம் ஆயிடுச்சு! அயலான் பட இயக்குனர் வேதனை!

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, ஷரத் கேல்கர், பால சரவணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டது. படத்தின் சிஜி வேலைகள் முடிவடையாத காரணத்தால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.
ஒரு வழியாக படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்திற்கான ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். அந்த அளவுக்கு டிரைலரில் வரும் காட்சிகள் அனைத்தையும் வித்தியாசமாகவும் காமெடியாகவும் இருந்தது.
இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் ஆர்.ரவிகுமார் அயலான் படம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” அயலான் படத்தின் படப்பிடிப்புக்காக கடந்த 2018-ஆம் ஆண்டு கிளம்பினோம். அந்த படப்பிடிப்பில் 50 % முடிந்துவிட்டது. பிறகு திட்டமிட்ட படி 2018-ஆம் ஆண்டு படப்பிடிப்பு நடக்கவில்லை.
எதற்கும் துணிந்தவன் கொடுத்த ஒரே அடி! படம் செய்ய முடியாமல் தவிக்கும் இயக்குனர்?
அதன்பிறகு, 2019-ஆம் ஆண்டு திரும்பவும் படப்பிடிப்பை தொடங்கினோம். பிறகு 2020-ஆம் ஆண்டு கொரானா வருவதற்கு முன்பு கொஞ்ச நாட்கள் ஷூட்டிங் போனோம். அதன்பிறகு கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பிறகு 2021-ஆம் ஆண்டு தான் படப்பிடிப்பை முடித்தோம். கடைசியாக 50 நாட்கள் படத்தை எடுக்க 3 வருஷம் ஆகிவிட்டது” எனவும் ஆர்.ரவிகுமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதனை காமெடியாக வைத்து ஆர்.ரவிகுமார் இந்த அயலான் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். ஏற்கனவே, இவர் இயக்கிய இன்று நேற்று நாளை படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த அயலான் படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025