நடிகர் சூர்யாவுடன் கைகோர்க்கும் இயக்குனர் பா.ரஞ்சித்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவர் சினிமாவில் மட்டும் அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா புதிய கல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கும் பலரும் வரவேற்பு தெரிவித்தாலும், சிலர் இவரது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் கருத்துக்கு, இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ” புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். இன்றைய கல்வி சூழலில் மிக முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளார். சிறும்பான்மையினர், பெண்கள், மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்தும், பேசியும் செயல்பட்டு வரும் நடிகர் சூர்யாவுக்கு நாம் துணை நிற்போம்.” என்று பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025