Mammootty : நடிகர் மம்மூட்டி ஈகோ பிடித்த ஆள் என்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்மூட்டி. 72 வயதான இவர் எப்போதுமே மற்றவர்களிடம் ஜாலியாக பேசுவதும் இயல்பாகவும் பழகுவது உண்டு, எனவே, இவரை பிடிக்காத ஆளே இருக்க முடியாது என்று கூட சொல்லலாம். ஆனால், தற்போது பிரபல இயக்குனரான ஆர்.கே. செல்வமணி பேட்டி ஒன்றில் மம்மூட்டி மிகவும் ஈகோ பிடித்த ஆள் என்று அவரை பற்றி பேசியுள்ளார்.
பேட்டியில் பேசிய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ” மம்மூட்டி ஒரு சிறந்த நடிகர் இதனை நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அவர் நடிகர் என்பதனை தாண்டி ஒரு நல்ல மனிதர். ஆனால், அவரை போல ஒரு ஈகோ பிடித்த ஆளை பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு அவருக்கு ஈகோ இருக்கிறது. ஒழுக்கத்தில் விஜயகாந்தை நாம் எப்படி சொல்கிறோமோ அதே போல தான் ஒழுக்கத்தில் மம்மூட்டி என்று சொல்வேன்.
ஒரு முறை ஒரு படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றவேண்டி இருந்தது. ஆனால், சில காரணங்களால் எனக்கும் அவருக்கும் செட் ஆகவில்லை. படத்தின் கதை எல்லாம் சொல்லி படத்தில் நடிக்க சம்மதம் வாங்கி அவரை வைத்து இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடந்தது. நான் சொல்லிவிட்டேன் இந்த படத்தில் அவர் வேண்டாம் அட்வான்ஸ் வேண்டுமென்றாலும் கொடுத்துவிடுகிறேன் என்று கூறினேன்.
மம்மூட்டியும் என்னால் சற்று கடுப்பாகி இதை மாதிரி ஒரு க்ராக் கூட படமே நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதில் இருந்து சில வருடங்கள் நான் அவருடன் பேசவே இல்லை. பிறகு பல வருடங்கள் கழித்து நான் தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்த காலத்தில் அவரை சந்தித்து அவரிடம் ஒரு கதையை சொன்னேன்.
ஆனால் என்னை க்ராக் என்று சொன்ன அந்த மம்மூட்டி எனக்கு வாய்ப்பு கொடுத்தது பெரிய விஷயம்” எனவும் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார். மேலும் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் மம்மூட்டி மக்கள் ஆட்சி, அரசியல் உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…