மம்மூட்டி ஒரு ‘ஈகோ’ பிடிச்ச ஆளு! வெளிப்படையாக பேசிய இயக்குனர் ஆர்.கே.செல்வமணி!

mammootty and RK Selvamani

Mammootty : நடிகர் மம்மூட்டி ஈகோ பிடித்த ஆள் என்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மம்மூட்டி. 72 வயதான இவர் எப்போதுமே மற்றவர்களிடம் ஜாலியாக பேசுவதும் இயல்பாகவும் பழகுவது உண்டு, எனவே, இவரை பிடிக்காத ஆளே இருக்க முடியாது என்று கூட சொல்லலாம். ஆனால், தற்போது பிரபல இயக்குனரான ஆர்.கே. செல்வமணி பேட்டி ஒன்றில் மம்மூட்டி மிகவும் ஈகோ பிடித்த ஆள் என்று அவரை பற்றி பேசியுள்ளார்.

பேட்டியில் பேசிய இயக்குனர் ஆர்.கே. செல்வமணி  ” மம்மூட்டி ஒரு சிறந்த நடிகர் இதனை நான் சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அவர் நடிகர் என்பதனை தாண்டி ஒரு நல்ல மனிதர். ஆனால், அவரை போல ஒரு ஈகோ பிடித்த ஆளை பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு அவருக்கு ஈகோ இருக்கிறது. ஒழுக்கத்தில் விஜயகாந்தை நாம் எப்படி சொல்கிறோமோ அதே போல தான் ஒழுக்கத்தில் மம்மூட்டி என்று சொல்வேன்.

ஒரு முறை ஒரு படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றவேண்டி இருந்தது. ஆனால், சில காரணங்களால் எனக்கும் அவருக்கும் செட் ஆகவில்லை. படத்தின் கதை எல்லாம் சொல்லி படத்தில் நடிக்க சம்மதம் வாங்கி அவரை வைத்து இரண்டு நாட்கள் ஷூட்டிங் நடந்தது. நான் சொல்லிவிட்டேன் இந்த படத்தில் அவர் வேண்டாம் அட்வான்ஸ் வேண்டுமென்றாலும் கொடுத்துவிடுகிறேன் என்று கூறினேன்.

மம்மூட்டியும் என்னால் சற்று கடுப்பாகி இதை மாதிரி ஒரு க்ராக் கூட படமே நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். அதில் இருந்து சில வருடங்கள் நான் அவருடன் பேசவே இல்லை. பிறகு பல வருடங்கள் கழித்து நான் தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்த காலத்தில் அவரை சந்தித்து அவரிடம் ஒரு கதையை சொன்னேன்.

ஆனால் என்னை க்ராக் என்று சொன்ன அந்த மம்மூட்டி எனக்கு வாய்ப்பு கொடுத்தது பெரிய விஷயம்” எனவும் இயக்குனர் ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.  மேலும் ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் மம்மூட்டி மக்கள் ஆட்சி, அரசியல் உள்ளிட்ட இரண்டு படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
pahalgam ipl bcci
Union minister Amit shah visit Anantnag dt hospital
JK Pahalgam Terror Attack
CSK - CEO
PM Modi Soudi to Delhi visit
thirumavalavan amit shah