ரஜினிமுருகன், சீமராஜாவை தொடர்ந்து பொன்ராம் அடுத்து யாரை இயக்க உள்ளார்?! முக்கிய தகவல்கள் இதோ!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளார் என எதிர்பார்த்த நிலையில், விஜய் சேதுபதியிடம் கதை கூறியுள்ளார்.
ஆனால் அவர் பிசியாக இருப்பதாக கூறியதால், தற்போது சசிகுமாரை நாயகனாக வைத்து கிராமத்து பின்னனியில் ஒரு கதை எழுதியுள்ளாராம். அந்த படத்தில் ராஜ்கிரண் முக்கிய ரோலில் நடிக்க உள்ளாராம். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.