Thalapathy 69 : விஜயின் 69 -வது படத்தை தான் இயக்கினால் இந்த பிரபலங்களை அவருடன் நடிக்க வைப்பேன் என இயக்குனர் நெல்சன் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்யின் 69 வது திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் நிலையில் ஒவ்வொரு இயக்குனர்களின் பெயரும் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக தளபதி 69 குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் நெல்சனிடம் தளபதி 69 படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு உங்களுக்கு வந்தால் யாரெல்லாம் நடிக்க வைப்பீர்கள் என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. அந்த கேள்விக்கு பதில் அளித்த இயக்குனர் நெல்சன் ” நான் தளபதி 69 இயக்குனர் இல்லை விஜய் சார் யாரை முடிவு செய்து வைத்து இருக்கிறார் என்று அவருக்கு தான் தெரியும்.
என்னிடம் தளபதி 69 படத்தை பற்றி நீங்கள் கேட்டதால் சொல்கிறேன். ஒருவேளை நான் இயக்கினால் அந்த படத்தில் விஜய் சாருடன் மகேஷ் பாபு, மோகன் லால், ஷாருக்கான் ஆகியோர் நண்பர்களாக நடிக்க வைப்பேன். விஜய் சாருக்கு ஜோடியாக நயன்தாரா மேடம் அல்லது அலியா பட் மேடத்தை நடிக்க வைப்பேன்” என்றும் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் சொல்லும் போதே ஆர்வம் எகிறுதே என கூறிவருகிறார்கள்.
மேலும் இயக்குனர் நெல்சன் ஏற்கனவே விஜயை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி விமர்சன ரீதியாக சரியான வரவேற்பு பெறவில்லை. அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…