காவியத் தலைவன்…ராமர் கோயில் விழா குறித்த பேசிய இயக்குனர் மிஷ்கின்!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22 கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார்.
சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள். தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷஷும் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், டெவில் திரைப்பட பிரஸ் மீட் இன்று நடைபெற்றது, அந்த விழாவை முடித்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் மிஷ்கின் ராமர் கோயில் விழா குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் பபேசுகையில், “ராம பிரான் மிகப்பெரிய அவதாரம். ஒரு காவியத் தலைவன் என இயக்குநர் மிஷ்கின் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அது பற்றிய அரசியல் கேள்விகளுக்கு, ‘அரசியலாக எனக்கு கருத்து சொல்ல தெரியாது. சினிமாக்காரனாக அரசியல் சார்ந்து கருத்துச்சொல்ல கூடாது என முடிவு செய்துள்ளேன், என்னுடைய அரசியல் என்பது ஓட்டு மட்டும் தான்.
நடிகர் பாபி சிம்ஹாவிற்கு சென்னை ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ்!
என் சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள், அனைத்து காலகட்டத்தில் வரும் அரசியலைப் பேசவேண்டுமென நினைக்கிறேன். மனித அவலம், பிற மனிதனை நேசிக்கத் தவறுவது, குடும்பத் தலைவன் எப்படி வாழ வேண்டும், மற்றவர்களுக்கு அன்பு செலுத்துதல், போன்றவைதான். என்னுடைய அரசியல் என்னுடைய படங்கள் மூலம் வெளிவரும்’ என பதிலளித்துள்ளார்.