துருவ் விக்ரமை ஓரம்கட்டிவிட்டு உதயநிதிக்கு முன்னுரிமை அளித்த மாரி செல்வராஜ்.!
முதலில் உதயநிதி நடிக்கும் திரைப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு அதற்கடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து கபடியை மையப்படுத்திய படத்தை இயக்க உள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
பரியேறும் பெருமாள், கர்ணன் எனும் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக யாரை இயக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் தனுஷ், தனது டிவிட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்து ஒரு படம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தார்.
ஆனால், தனுஷ் அடுத்தடுத்து பல படங்கள் ஷூட்டிங் முடிக்க வேண்டி இருந்ததால் அது நடக்கும் ஆனால், அது தற்போது இல்லை சில வருடங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.
அதற்கடுத்து கபடி விளையாட்டை மையப்படுத்தி துருவ் விக்ரமை நாயகனாக வைத்து புதிய படம் ஒன்று மாரி செல்வராஜ் இயக்க உள்ளார் என கூறப்பட்டது அதற்கான வேளைகளில் மாரி செல்வராஜ் ஈடுபட்டிருந்தார். துருவ் விக்ரம் கபடி பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.
ஆனால், அந்த படத்திற்கு கால அவகாசம் தேவை என்பதால், அடுத்ததாக உதயநிதியை வைத்து மாரி செல்வராஜ் ஒரு புதிய படம் எடுக்க ஆயத்தமாகிவிட்டாராம். அதனால், உதயநிதி படத்தை அடுத்து, துருவ் விக்ரம் படம் அதற்கடுத்து தனுஷ் படம் என பிசியாக இருக்க போகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.