பிறமொழி படங்களின் வெற்றியைக் கண்டு தமிழ் சினிமா கவலைப்பட தேவையில்லை – மணிரத்னம்.!
இந்த வரும்டம் வெளியான தமிழ் படங்கள் எதுவும் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமையவில்லை என்றே கூறவேண்டும். படத்திற்காக போட்ட பட்ஜெட்டை விட அதிகமாக வசூல் செய்தாலும் விமர்சன ரீதியாக எந்த படமும் பெரியவெற்றியை பெறவில்லை.
ஆனால் பான் இந்தியா படங்களான ஆர்ஆர்ஆர்,கேஜிஎப் ஆகிய திரைப்படங்கள் இந்த வரும்டம் வெளியாகி தமிழ் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், ஹனிபிலிக்ஸ் நிறுவனத்தின் சினிமா தொடர்பான மென்பொருள் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மணிரத்னம், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், நடிகர் பிரசாந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய மணிரத்னம் ” பிறமொழி படங்கள் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதைக் கண்டு கவலை படத்தேவையில்லை. தமிழ் படங்கள் இந்திய சினிமாவில் வெற்றி அடைந்துள்ளன. தமிழ் சினிமாவில் திறமைக்கு பஞ்சமே கிடையாது புதிய திறமைகள் பிற மொழிகளில் உருவாகி இருப்பது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படம், வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.