மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் இயக்குனர் மணிரத்னம்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மணிரத்னம் பல படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாக்கியுள்ள படங்கள் பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, இவர் நரம்பியல் பிரச்னை காரணமாக, மாதம் ஒருமுறை பரிசோதனைக்காக மருத்துவரை சந்திப்பதாக கூறியுள்ளார். அதேபோல் நேற்று பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட இவர், பரிசோதனை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.