2023-ஆம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது ஆஸ்கர்.
சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. உலக நாடுகளில் இருக்கும் ஒவ்வொரு திரைக் கலைஞர்களும் சென்றடைய விரும்பும் மேடையாக இருந்து வருகிறது. இதில், சமீப காலமாகத்தான் இந்திய கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது கிடைத்து வருகிறது. கடந்தாண்டு முன்பு வரை சத்யஜித் ரே, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட சிலர் இந்திய சார்பில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விருது விழாவில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் ஆஸ்கர் விருதினை வென்றனர். இதனை இந்திய ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். விருது ஒருபக்கம் இருந்தாலும், இதனை தேர்வு செய்வதற்கு ஆண்டுதோறும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள்.
அந்தவகையில், 2023ம் ஆண்டு ‘ஆஸ்கர் விருதுகள்’ தேர்வுக் குழுவுக்கு இந்தியர்கள் உட்பட 398 பேர் உறுப்பினராக தேர்வு செய்யயப்பட்டுள்ளனர். புதிய உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான பட்டியலை ஆஸ்கர் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆஸ்கர் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இயக்குநர் மணிரத்னத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்தும் கூறியுள்ளார். மேலும், ஆஸ்கர் குழுவின் புதிய உறுப்பினர்கள் பட்டியலில் ஒளிப்பதிவாளர் கே.கே.செந்தில்குமார், தயாரிப்பாளர் கரண் ஜோகர் ஆகியோரும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும்…
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…