ரேஸ்-க்கு முன் அஜித் சார் என்னிடம் சொன்ன அந்த விஷயம்… பட்டியலிட்ட இயக்குநர் மகிழ் திருமேனி!
ரேஸிங் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்பு அஜித் என்ன சொன்னார் என்பதை இயக்குநர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.

சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில் திரிஷா, ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இயக்குநர் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அஜித் குறித்தும், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது குறித்தும் பேசியுள்ளார்.
அஜித் குமார் கார் ரேஸ் குறித்து மகிழ் திருமேனி, “ ரேஸிக்கு பங்கேற்கப்போவதை அஜித் சார் முன்கூட்டியே சொல்லிவிட்டார். ரேஸில் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். அதனால் தான் என்னை நம்பி பணம், உழைப்பை போட்டுள்ள அனைவருக்காகவும் 2 படங்களையும் முடிக்க வேண்டும் என நினைத்தேன்.
ரேஸிற்கு செல்லும்போது நான் 100% அர்ப்பணிக்க வேண்டும். எனக்கு 2 படம் இருக்கு, கமிட்மென்ட் இருக்கு என நினைத்து 90% மட்டும் அழுத்தினால், நான் ரேஸிற்கு உண்மையாக இல்லை என்பதுபோல ஆகிவிடும் எனக் கூறினார். அவரின் இந்த வார்த்தையை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. இதை வாழ்நாளிலும் நான் மறக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், டைட்டில் பற்றி மகிழ் திருமேனி, “இந்த டைட்டிலுக்கு என்று ஒரு பவர் இருக்கிறது. அது நம்மை சோதித்து பார்க்கிறது. அதனுடைய பெயரைத் தாங்குவதற்கு நாம் தகுதியானவர்களாக என்று கேட்கிறது. நாம் அதனைத் தாங்குவதற்கு தகுதியானவர்கள்தான் என்று நிரூபிக்க வேண்டும்.’ என்று ‘விடாமுயற்சி’ டைட்டில் பற்றி பேசும்போது அஜித் சார் சொன்னார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘அஜித் சார் என்னை மட்டும் இல்ல இந்த படத்துல வேலை செஞ்ச டெக்னிசியன்ஸ் எல்லார்கிட்டயும் சொன்னது இந்த படம் நம்மளோட கெரியர்லயே பேர் சொல்லும் படமா அமையப்போகுது. இந்த படம் நான் நினைச்சதை விட நல்லா வந்திருக்கு. இந்த மாதிரி படத்த தான் நான் பண்ண விரும்பினேன்னு சொன்னாரு.
அவர் என்கிட்ட மகிழ் நாம் சேர்ந்து இன்னும் நிறைய படங்கள் பண்ண போறோம் இதுதான் நான் டைரக்டர் சிவா கிட்டயும் சொன்னேன். வினோத் கிட்டயும் சொன்னேன். உங்க கிட்டயும் சொல்றேன்னு சொன்னாரு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இதைவிட வேற என்ன வேணும்” என்று அஜித் கூறியதாக பேசியுள்ளார்.