அனுஷ்க்காவை ரெம்ப பிடிக்கும்.. பதட்டமாயிட்டேன்.! அந்த கதையை உளறிய டாப் இயக்குனர்?
நடிகை அனுஷ்காவிற்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறையவே இல்லை. அவர் உடல் எடை அதிகரித்த பிறகு அவருக்கு வரும் பட வாய்ப்புகள் மொத்தமாகவே குறைய தொடங்கிவிட்டது. இருந்தாலும் ஒரு சில படங்களில் மட்டுமே அனுஷ்கா சமீபகாலமாக நடித்து வருகிறார். ரசிகர்களை போலவே சினிமா பிரபலங்கள் பலருக்கும் அனுஷ்காவை மிகவும் பிடிக்கும்.
அதில் ஒருவர் தான் பையா, சண்டைக்கோழி, அஞ்சான் உள்ளிட்ட படங்களை இயக்கிய லிங்கு சாமியும். இவர் அனுஷ்காவின் தீவிரமான ரசிகராம். அனுஷ்கா நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே அவருக்கு மிகவும் பிடிக்குமாம். பையா படத்தின் போது கார்த்தியுடன் அவருக்கு நல்ல நட்பு ஏற்பட்டது. அந்த சமயம் கார்த்தியிடம் அனுஷ்காவை தனக்கு பிடிக்கும் என்று லிங்கு சாமி கூறுவாராம்.
பிறகு அனுஷ்கா கார்த்திக்கு ஜோடியாக அலெக்ஸ் பாண்டியன் படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு முறை லிங்கு சாமியை அழைத்தாராம். அந்த சமயம் தான் முதல் முறையாக இயக்குனர் லிங்கு சாமி அனுஷ்காவை நேரில் பார்த்தாராம். பார்த்தவுடன் இவருக்கு கை மற்றும் கால்கள் எல்லாம் நடுங்கி சற்று பயந்தே விட்டாராம்.
அனுஷ்காவை கல்யாணம் பண்ணிக்கோ! அந்த நடிகரை வற்புறுத்தும் குடும்பம்?
பின் அனுஷ்காவிடம் கார்த்தி ” உங்களை இவருக்கு ரொம்ப பிடிக்கும் எப்போதும் உங்களை பற்றி பேசுவார்” என கூறினாராம். அதற்க்கு அனுஷ்கா தெரியும் நான் அவருடைய பேட்டிகளில் பார்த்திருக்கிறேன் என கூறினாராம். பிறகு முதல் முறை ரஜினியை பார்த்தால் எப்படி எல்லாரும் பார்ப்போமா அதே போலவே அனுஷ்காவை லிங்கு சாமி பார்த்துக்கொண்டு இருந்தாராம்.
அதன்பிறகு அவருடைய நலம் விசாரித்துவிட்டு லிங்கு சாமியிடம் அனுஷ்கா பேசி கொண்டு இருந்தாராம். பின் சாப்பிட செல்லும்போது அங்கு இருக்கும் தட்டை எடுத்துவிட்டு சாப்பாட்டை பார்க்கலாம் அனுஷ்காவையே லிங்கு சாமி பார்த்துக்கொண்டு இருந்தாராம். பின் அவருடைய தட்டு கீழே விழுந்து நொறுங்க அனுஷ்கா அதிர்ச்சியுடன் பார்த்தாராம்.
அவரை பார்த்தவுடன் லிங்கு சாமி உங்களை பார்த்துவிட்டு தான் தட்டை பதட்டத்தில் கீழே போட்டுவிட்டேன் என்று கூறினாராம். இதனை பார்த்த அனுஷ்காவும் வெட்கப்பட்டு கொண்டே சிரித்தாராம். இந்த தகவலை இயக்குனர் லிங்கு சாமியே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனுஷ்கா மீது இவ்வளவு பிரியமா என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.