நடிகர் விஜய்யைய் வைத்து ஒரு படமாவது இயக்கவேண்டும் என பல முன்னணி இயக்குனர்களும் ஆசைபடுவது உண்டு. அப்படி தான் ஜிகிர்தண்டா, பேட்ட, இறைவி, மஹான், ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் கூட விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்கவேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்.
இவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 100 கோடி பட்ஜெட்டில் எந்த அளவிற்கு ஒரு படத்தை பிரமாண்டமாகவும், ரசிகர்களுக்கு பிடிக்கும் படி காமிக்க வேண்டுமோ அதே அளவிற்கு அருமையாக படத்தை மக்களுக்காக கார்த்திக் சுப்புராஜ் கொடுத்திருந்தார்.
கமலிசம் பழகு! கார்த்திக் சுப்புராஜை கடுப்பேற்றும் பிக் பாஸ் பிரபலம்!
இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவில் எழுந்துள்ளது. இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய்யை வைத்து படம் இயக்கியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பதாகவும், கண்டிப்பாக அவரை சந்தித்து கதை கூறுவேன் என கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” நான் விஜய் சாரை வைத்து ஒரு படத்தை இயக்கவேண்டும் என்று ஆசை படுகிறேன். அவரை இதற்கு முன்பு சந்தித்து நான் 2 கதைகளை கூறியிருக்கிறேன். ஆனால், அந்த இரண்டு கதையும் அவரை ஈர்க்கவில்லை. ஆனால், நான் இப்போது ஒரு கதையை அவரிடம் கூறலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.
அவர் தற்போது அவருடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவர் அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்த படத்திற்கான கதை கேட்கும் போது நான் அந்த கதையை அவரிடம் கூறுவேன்” என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இவர் கூறியதை பார்த்த ரசிகர்கள் விரைவில் நீங்கள் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணவேண்டும் என கூறி வருகிறார்கள்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…