ஜிகர்தண்டா திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இரண்டாவது பாகத்தை இயக்கியுள்ளார். இந்த இரண்டாவது பாகம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கும் இந்த படத்திற்கான டிரைலர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம். படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கார்த்திக் சுப்புராஜ் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
பேட்டியில் பேசிய கார்த்திக் சுப்புராஜ் ” ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்தின் மைய கருவே தமிழ் சினிமாவின் வின் முதல் கருப்பு ஹீரோ என்பது தான். இதனை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை மனதில் வைத்து எடுத்தேன். ஏனென்றால், அவர் தான் தமிழ் சினிமாவின் முதல் கருப்பு ஹீரோ. ஜிகர்தண்டா கதை நடப்பது 1975, ஏனென்றால் சூப்பர் ஸ்டாரின் முதல் படமான அபூர்வ ராகங்கள் அந்த ஆண்டு வெளியானது.
திரைக்கதைக்கு எனக்கு உதவியது மற்றும் அது முக்கியமான கட்டத்தில் கதையில் வருகிறது. நானும் லாரன்ஸ் மாஸ்டரும் ரஜினி சாரின் வெறித்தனமான ரசிகர்கள். எனவே, ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் படத்தின் படப்பிடிப்பின் போதெல்லாம் ரஜினி சாரை பற்றி எதாவது பேசிக்கொண்டே இருப்போம். அந்த அளவிற்கு அவரை பற்றி பேசுவதற்கு பல விஷயங்கள் இருக்கிறது” என கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய கார்த்திக் சுப்புராஜ் ” மீண்டும் ரஜினி சாரை வைத்து ஒரு படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் முள்ளும் மலரும் மாதிரி ஒரு படம் பண்ண விருப்பமா இருக்கு. அந்த படம் அந்த அளவுக்கு மிகவும் அருமையாக இருக்கும். ரஜினி சார் கடைசியாக நடித்த ஜெயிலர் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் பார்த்தவுடன் மிரண்டுவிட்டேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…