Categories: சினிமா

Kamal Haasan : இயக்குனர் கமல்ஹாசனின் திரைப்படைப்புகளும்… அதன் சர்ச்சைகளும்!

Published by
பால முருகன்

கமல்ஹாசன் படங்களில் நடித்தது மட்டுமின்றி விஸ்வரூபம், விருமாண்டி,விஸ்வரூபம்2,  ஹே ராம் உள்ளிட்ட படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி வெற்றிபெற்றாலும், இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் சர்ச்சை இல்லாமல் வெளியாகவில்லை என்றே கூறலாம்.  இதில், எந்தெந்நத படங்கள் வெளியாகும் போது என்னென்ன சர்ச்சை கிளம்பியது என்பதை தெளிவாக பார்க்கலாம்.

ஹே ராம்

கமல்ஹாசன் இயக்கத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹேராம்.  இந்தியா – பாகிஸ்தான் பிரிந்த கரணம் மற்றும் மகாத்மா காந்தியின் படுகொலை மற்றும் அதன் முன் கதைகள் , சாகேத் ராமின் வாழ்க்கையை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த சமயம் பிரதான அரசியல் கட்சிகள்  இந்த படத்தை வெளியிடகூடாது என எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இதனால் படம் எடுக்கப்பட்டு சுமார் 1 வருடமாக வெளியாகாமல் இருந்தது.

1 வருடங்களாக படம் வெளியாகாமல் பிரிவியூ காட்சி எனப்படும் சிறப்பு காட்சி மட்டுமே திரையிடப்பட்டு வந்ததது. அதில் பிரதான அரசியல் தலைவர்களும், சென்சார் அதிகாரிகளும் பார்த்து வந்தார்கள். பிறகு பல்வேறு கட்-கள் கூறப்பட்டு ஒரு வழியாக படம் 2000-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. விமர்சன ரீதியாக வெற்றிபெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிபெறவில்லை என்றே கூறலாம். இருப்பினும் கமல்ஹாசன் சினிமா கேரியரில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவிலேயே சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக ஹேராம் இருக்கிறது என்றே கூறும் அளவுக்கு தற்போது இந்த படம் பிரபலம் அடைந்துள்ளது.

ஹேராம் படத்தில் வித்தியாசமான முயற்சிகளை கமல்ஹாசன் செய்து இருப்பார். அந்த சமயம் படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட இப்போது படத்தை பல்வேறு முறை பார்த்துவிட்டு ஒவ்வொரு முறையும் படம் புதியதாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.

விருமாண்டி

கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான விருமாண்டி படத்தை பிடிக்காத ஆளே இருக்கமுடியாது. அந்த அளவிற்கு ஒரு நல்ல கமர்ஷியல் படத்தை இயக்கி நடித்து மக்களுக்காக கமல்ஹாசன் கொடுத்திருப்பார். இந்த திரைப்படம் கமல்ஹாசனின் சினிமா கேரியரில் மறக்க முடியாத ஒரு பெரிய திரைப்படமாக இருந்தாலும் கூட இந்த படம் பெரிய சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது.

அது என்னவென்றால், விருமாண்டி படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் சண்டியர் தான். ஆனால், சண்டியர் எனும் பெயரில் படத்தை வெளியிட கூடாது என சில அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இதன்பிறகு படம் விருமாண்டி என்ற பெயரில் வெளியானது. படத்தின் தலைப்பு மாற்றப்பட்டது குறித்து கமல்ஹாசனும் கூட அந்த சமயம் பேசி இருந்தார்.

அதில் இந்த மாதிரி பிரச்சனைகள் வருவதால் என்னால் படத்தை இயக்குவதில் கவனம் செலுத்த முடியவில்லை ஒரு வழியாக படத்தை எடுத்துள்ளோம் எப்படி வந்திருக்கு என பார்த்துவிட்டு சொல்லுங்கள் என கூறியிருந்தார். படமும் விருமாண்டி எனும் பெயரில் சர்ச்சைக்கு மத்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

விஸ்வரூபம்

2013 -ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான விஸ்வரூபம் திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி 100 கோடி வசூல் செய்து வெற்றிப்படமாக மாறியது. அப்படத்தில் ஒரு சமூத்தினரை தீவிரவாதிகளாக காட்டப்பட்டதாக கூறி அதற்கு எழுந்த எதிர்ப்புகள் காரணமாகவே இந்த படத்திற்கு சர்ச்சை வெடிக்க காரணமாக அமைந்தது. இதன் காரணமாக படத்திற்கு தடை கோரி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இதனால், தமிழக அரசு இந்த திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதித்தது. ஆனால், மற்ற மாநிலங்களில் படம் வெளியாகிவிட்டது. பிறகு கமல்ஹாசன் தமிழ்நாட்டை விட்டு அமெரிக்காவுக்கு செல்வதாக அறிக்கையை விட்டு இருந்தார். இதனால் ரசிகர்கள் அனைவரும் அவருடைய வீட்டிற்கு முன்பு குவிந்து நீங்கள் எங்கேயும் போகக்கூடாது என ஒருமித்த கோரிக்கையை முன்வைத்தனர். அதன் பிறகு, கமல்ஹாசன் நான் எங்கேயும் போகவில்லை என ரசிகர்களிடம் கூறினார்.

பிறகு, படம் ஒரு வழியாக திரையரங்குகளில் வெளியாகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. கிட்டத்தட்ட அந்த சமயமே இந்த படத்தின் சர்ச்சைகள் படத்தின் ப்ரோமோஷனாக அமைந்த நிலையில், படமும் மக்களுக்கு பிடித்த காரணத்தால் படம் 100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறியது.

Published by
பால முருகன்

Recent Posts

BGT தொடர் தோல்வி… ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி!

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…

12 minutes ago

இனிமே ஹீரோவாதான் நடிப்பேன்! ஆதங்கத்துடன் முடிவை கூறிய கலையரசன்!

சென்னை : கலையரசன் ஒரு சிறந்த நடிகர் என பாராட்டு வாங்குவது பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. அதற்கு…

41 minutes ago

சவுதி அரேபியாவை திருப்பி போட்ட பேய் மழை.. வெள்ளத்தில் மிதக்கும் மெக்கா.!

மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…

1 hour ago

திமுக கொடியில் இருக்கும் கருப்பை நீக்க முடியுமா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!

சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…

1 hour ago

நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 30க்கும் மேற்பட்டோர் பலி!

டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…

2 hours ago

மறைந்த தலைவர்களுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்… சட்டசபை ஒத்திவைப்பு!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…

2 hours ago