hari - gopalakrishnan [file image]
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் இன்று காலமானார்.
88 வயதாகும் அவர், சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த வி.ஆ.கோபாலகிருஷ்ணனுக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் தான் இயக்குனர் ஹரி.
தற்போது, ஹரியின் தந்தை காலமான செய்தியை அறிந்து வணங்கான் படப்பிடிப்பில் இருந்த ஹரியின் உறவினர் ஒருவர் மற்றும் நடிகர் அருண் விஜய் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்த கிளம்பியதாக சொல்லப்படுகிறது.
ஹரி தந்தை மறைவுக்கு சிலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், சென்னையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் திரையுலகினர் அஞ்சலிக்காக இன்று பிற்பகல் 2 மணி வரை வைக்கப்பட்டிருக்கும். பின்னர், நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும் என கூறப்படுகிறது.
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…