இயக்குனர் ஹரியின் தந்தை காலமானார்! நடிகர் அருண் விஜய் நேரில் அஞ்சலி….

hari - gopalakrishnan

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் ஹரியின் தந்தை வி.ஆ.கோபாலகிருஷ்ணன் இன்று காலமானார்.

88 வயதாகும் அவர், சில மாதங்களாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மறைந்த வி.ஆ.கோபாலகிருஷ்ணனுக்கு ஐந்து மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் தான் இயக்குனர் ஹரி.

தற்போது, ஹரியின் தந்தை காலமான செய்தியை அறிந்து வணங்கான் படப்பிடிப்பில் இருந்த ஹரியின் உறவினர் ஒருவர் மற்றும் நடிகர் அருண் விஜய் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்த கிளம்பியதாக சொல்லப்படுகிறது.

ஹரி தந்தை மறைவுக்கு சிலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், சென்னையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஹரியின் இல்லத்தில் திரையுலகினர் அஞ்சலிக்காக இன்று பிற்பகல் 2 மணி வரை வைக்கப்பட்டிருக்கும். பின்னர், நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்குகள் நடைபெறும் என கூறப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்