Gautham Menon இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் மின்னலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடி என பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். இவருடைய படங்களுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று கூட சொல்லலாம்.
இப்படி பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் கெளதம் மேனன் எந்தவி விஷயமாக இருந்தாலும் பயம் இல்லாமல் தயக்கம் இல்லாமல் வெளிப்படையாகவே பேசிவிடுவார். அப்படி பட்ட கெளதம் மேனனனுக்கே இயக்குனர் மணிரத்தனத்தை பார்த்தாலே பயம் வந்துவிடுமாம். இதனை அவரே சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய இயக்குனர் கெளதம் மேனன் ” இன்றுவரை மணிரத்தனத்தை பார்த்து பேசுனாலே என்னுடைய கைகள் கால் எல்லாம் தானாகவே உதறும். அந்த அளவிற்கு எனக்கு பயம் பதட்டம். நான் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு நாயகன் படத்தை பார்த்து தான் சினிமாவுக்கு வந்தேன். படத்தில் வரும் இசை படத்தின் திரைக்கதை படத்தில் நடித்த நடிகர்கள் இதையெல்லாம் பார்க்கும்போது தான் எனக்கு படத்தை இயக்கவே ஆசை வந்தது.
நாயகன் படத்தின் தாக்கத்தை என்னால் மறக்கவே முடியாது. நான் அவருடன் உதவி இயக்குனராக பணிபுரிய ஆசைப்பட்டேன். அதற்கான முயற்சியையும் எடுத்து இருக்கிறேன். ஆனால், அது நடக்கவில்லை. இருப்பினும் இப்போது அவருடன் நெருங்கி பழகுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்கிறது” எனவும் இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…