தனுஷ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால், மீண்டும் படம் இயக்குவதை தற்போது நிறுத்தி வைத்துள்ளார். அதனால், தற்போதைக்கு இயக்குனர் தனுஷை திரைக்கு பின்னால் பார்ப்பது கடினம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் அடுத்ததாக மாறன் திரைப்படம் திரைக்கு வர தயாராகி விட்டது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். சத்ய ஜோதி பிலிம்ஸ் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.
அதனை தொடர்ந்து, மித்ரன் ஆர்.ஜவகர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார். அதே போல செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
நடிகர் தனுஷ் இயக்குனர் தனுஷாக பா.பாண்டி எனும் திரைப்படத்தை எடுத்திருந்தார். ராஜ்கிரண் ஹீரோவாக நடித்த அந்த திரைப்படம் வெற்றியடைந்தது. அதனை தொடர்ந்து புதிய படம் இயக்க தனுஷ் திட்டமிட்டிருந்தார். இந்த திரைப்படத்தில் நாகார்ஜுனா, அதிதி ராவ் ஹைதரி, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டது.
ஆனால் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்காமல் இருந்து வருகிறது. அது எப்போது நடக்கும் என விசாரித்தால், தற்போது தனுஷ் முழுக்க முழுக்க நடிப்பில் தான் கவனம் செலுத்த உள்ளாராம். அதனால், இன்னும் 2 வருடங்களுக்கு இயக்குனர் தனுஷை பார்ப்பது கடினம் என கூறப்படுகிறது. அப்போது நடைபெற்றாலும் மீண்டும் அதே நட்சத்திர கூட்டணி நடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…