சினிமா

ரஜினிக்கு சொன்ன அந்த கதையில் தான் சிம்பு நடிக்கிறார்! உண்மையை உடைத்த தேசிங் பெரியசாமி!

Published by
பால முருகன்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தேசிங் பெரியசாமி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து கதை ஒன்றையும் கூறியிருந்தார். அந்த கதை ரஜினிக்கும் பிடித்து போக படத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துவிட்டார். ஆனால், சில காரணங்களால் அந்த படம் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தேசிங் பெரியசாமி அடுத்ததாக சிம்புவை சந்தித்து கதை ஒன்றை கூறி அவருக்கும் அந்த கதை பிடித்துப்போக அவருடைய இயக்கத்தில் தன்னுடைய 48-வது படத்தில் சிம்பு நடித்து வருகிறார். தற்காலிகமாக ‘STR48’ என்று இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தன்னுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவிருக்கும் நிலையில், இந்த படத்தின் கதை ரஜினிக்கு சொன்ன கதையா என்ற கேள்விக்கு தேசிங் பெரியசாமி  சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்து இருக்கிறார். இது குறித்து பேசிய தேசிங் பெரியசாமி ” ரஜினிக்கு சொன்ன கதையில் தான் சிம்பு நடிக்கிறார். அவருக்கு சொன்ன கதை என்னவோ அதை தான் நான் சிம்புவிடம் சொன்னேன்.

அவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்துவிட்டது. மற்றபடி, படத்தில் சிம்புவுக்காக கதையில் சில மாற்றங்கள் எல்லாம் செய்யவே இல்லை. இந்த கதையின் முதல் பாதியை நான் கூறியவுடன் சிம்பு சாருக்கு மிகவும் பிடித்துவிட்டது. அடுத்ததாக அதனுடைய இரண்டாவது பகுதியை சொல்வதற்கே பல மணி நேரங்கள் ஆனது. அந்த அளவிற்கு படத்தின் முதல் பகுதியை பற்றி மட்டுமே பேசி கொண்டு இருந்தோம்.

இந்த படத்தின் கதை கூறுவதற்கு முன்பே நடிகர் சிம்புவை எனக்கு நன்றாகவே தெரியும். கண்ணும் கொள்ளையடித்தால் படம் சமயத்திலேயே தெரியும். படம் வெளியான பிறகு படத்தை பார்த்துவிட்டு என்னிடம் 30 நிமிடம் பேசினார். அவருக்கு அந்த படமும் அவருக்கு பிடித்திருந்தது” எனவும் தேசிங் பெரியசாமி  கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“ஏற்கனவே அனகோண்டானு சொல்லி வச்சு செஞ்சிட்டாங்க” விழுந்து விழுந்து சிரித்த விஜய் ஆண்டனி!

சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…

21 minutes ago

“இந்தியா கூட்டணிக்கு வாங்க” தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் மாநிலத் தலைவர்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…

57 minutes ago

13 நிமிடங்களில் 13 கி.மீ…. மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்..!

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…

1 hour ago

தங்கம் விலை சற்று சரிவு… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…

1 hour ago

‘ராஞ்சி போட்டிகளில் விளையாட மாட்டோம்?’ கோலிக்கு கழுத்து வலி! கே.எல்.ராகுலுக்கு முழங்கை பிரச்சனை!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…

1 hour ago

டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் தடை? உறுதியானது நீதிமன்ற தீர்ப்பு!

நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…

2 hours ago