மக்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் அட்லீயின் மனைவி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இப்படம் தீபாவளியன்று வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய் ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இதில், தளபதி விஜயின் பேச்சு விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது.
இயக்குனர் அட்லீயின் மனைவியான பிரியா அட்லீ தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அட்லீயுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு, இசை வெளியீட்டு விழா சிறப்பாக அமைய உதவிய அணைத்து மக்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.