இயக்குனர் அட்லீ மசாலா சினிமாவின் மாயக்காரர் – பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர்
பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், அசுரன் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து பேசியுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்திற்கு திரையுலக பிரபலங்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுபோல, இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், பிரபல பாலிவுட் இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர், அசுரன் திரைப்படத்தையும், அட்லீயையும் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘வெற்றிமாறனின் அசுரன் பார்த்தேன். கடவுளே என்னவொரு படம். பார்க்கும்போது சீட்டின் நுனிக்கு வந்துவிட்டேன். என்று கூறியுள்ளார்.
மேலும் இயக்குனர் அட்லீ குறித்து கூறுகையில், அட்லீயின் பிகில் பிடித்திருந்தது. அவருடைய எல்லா படமும் பார்த்திருக்கிறேன். அட்லீ மசாலா சினிமாவின் மாயக்காரர் .’ என தெரிவித்துள்ளார்.