மக்களை தொடாமல் வணக்கம் போட்ட கமல்! வீடியோவை கொண்டு வந்து விமர்சித்த ப்ளூ சட்டை!

kamal and Blue sattai Maran

நடிகர் கமல்ஹாசன் கடந்த நவம்பர் 7-ஆம் தேதி தன்னுடைய 69-வது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் விழா ஒன்றும் நடைபெற்றது. அந்த விழாவில் கமல்ஹாசனை பார்க்க ரசிகர்கள் பரிசுகளை கொடுத்துவிட்டு அவர்களுடன் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது.

குறிப்பாக ஒரு வீடியோவில் கமல்ஹாசன் ரசிகரிடம் இருந்து பரிசுகளை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு கை கூட கொடுக்காமல் நின்று கொண்டிருப்பது போல காட்சிகள் இருந்தது. அதனை பார்த்த பலரும் மக்களுக்கு கையாவது கொடுக்கலாம் என விமர்சித்து கூறிவந்தனர். இதனையடுத்து, ப்ளூ சட்டை மாறனும் வீடியோ ஒன்றை வெளியீட்டு கமல்ஹாசனை விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ஒரு பார்ட்டி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் நடிகை ராதிகாவுடன் நின்று கொண்டு மிஷ்கின் பாடல் பாடுவதை ரசித்து பார்த்துக்கொண்டிருங்கிறார். அதுவும் ராதிகா மீது தொழில் கையை போட்டு கொண்டு ஸ்டைலாக நின்று கொண்டு இருக்கிறது. அதைப்போல அவருடன் இன்னும் சில நடிகைகள் மற்றும் பிரபலங்கள் நின்று கொண்டு இருமுகிறார்கள்.

அப்பாவை மக்கள் சரியாக கொண்டாடவில்லை! இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் வேதனை!

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ப்ளூ சைட்டை ” நம்மவர் 69 பிறந்தநாள் நிகழ்ச்சியில் வாழ்த்து சொல்ல வந்த மக்களை தள்ளி நிற்க வைத்து.‌. அவர்களின் கைகளை தொடாமல் வணக்கம் போட்ட கமல்.. இந்த வீடியோவில்? அவரின் கைகள் உங்கள் தோளினை அரவணைத்து.. புகைப்படமெடுக்க விரும்பினால்.. நீங்கள் சினிமாக்காரர் அல்லது செல்வந்தராக இருக்க வேண்டும்.

ஏனெனில்.. தற்போது இருப்பது விக்ரம் வெற்றிக்கு பிறகு மாறியுள்ள கமல்” என விமர்சித்து கூறியுள்ளார்.  மற்றோரு பதிவில் ‘பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல வந்தும்.. நாலாபுறமும் இடைவெளி ஏற்படுத்தி‌.. குறுக்கே தடை அமைத்து.. வணக்கம் போட்ட கமல். இவரிடம் கை குலுக்கி, பக்கத்தில் நின்று புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டவர்களுக்கு ஏமாற்றம். திருப்பதி பாலாஜி கோவிலை விட கெடுபிடி காட்டிய கட்சியினர் மற்றும் பவுன்சர்கள். ரஜினி, விஜய்க்கு இருக்கும் சமத்துவ எண்ணம் கமலுக்கு இல்லாமல் போனது” எனவும் பதிவிட்டுள்ளார். ப்ளூ சட்டை மாறன் கமல்ஹாசன் மட்டுமில்லை பல நடிகர்களையும் விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PahalgamTerroristAttack live
Sketches of terrorists
Terrorist Attack
j&k terror attack
trapped in Kashmir terror
Khawaja Asif
Pahalgam Terrorist Attack