கோபத்தில் தான் அந்த முடிவு எடுத்தேன்! இயக்குனர் அமீர் பேச்சு!

director ameer

இயக்குனர் அமீர் தமிழ் சினிமாவில் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே உள்ளிட்ட படங்களை இயக்கி தான் ஒரு தலை சிறந்த இயக்குனர் என்பதனை நிரூபித்துவிட்டார். அதே சமயம் யோகி, ஆதிபகவன், வடசென்னை, மாறன் ஆகிய படங்களில் நடித்து தான் ஒரு நல்ல நடிகர் என்பதனையும் காட்டிவிட்டார். இதில் அவர் வடசென்னை படத்தில் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம்.

இப்படி நடிகராகவும் ஒரு பக்கம் கலக்கி கொண்டு இருக்கும் இயக்குனர் அமீர் தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் அமீர் தான் நடிகனாக வேண்டும் என்று முடிவெடுத்தது கோபத்தில் எடுத்த முடிவு தான் என பேசியுள்ளார். இது குறித்து பேசிய இயக்குனர் அமீர் ” நான் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் பயணிக்க திட்டமிட்டு இருக்கிறேன்.

ரொம்ப ஏமாந்துட்டேன்…துரோகம் செஞ்சிட்டாரு! ஷீத்தல் பற்றி எமோஷனாக பேசிய பப்லு!

அதில் முதன்மை நான் இயக்கத்திற்கு தான் கொடுப்பேன். எனக்குள் படங்களை இயக்க வேண்டும் என்ற ஆர்வம் பெரிதாக எழுந்துகொண்டே தான் செல்கிறது. நான் நடிகர் ஆனது கோவத்துல எடுத்த முடிவு. நான் விருப்பப்பட்டு நடிக்கவேண்டும் என்று நான் நடிக்க ஆரம்பிக்கவில்லை. அதே சமயம் விருப்பப்பட்டு நான் செய்தது படங்களை இயக்குவது.

என்னுடைய மனதிற்குள் நான் இயக்குனராக ஆகவேண்டும் என்பது தான் கனவாக இருந்தது. இந்த சமூகத்தில் நடிகர்களுக்கு இருக்கக்கூடிய முக்கியத்துவம் என்னை நடிகனாக மாற்றியது மற்றபடி நடிகராக ஆக வேண்டும் என்பதில் எனக்கு எந்த வித ஈடுபாடும் இல்லை. ஆனால், அதனை நான் குறை எல்லாம் கூறவில்லை. என்னைப்பொறுத்தவை இயக்கம் முதலில் இரண்டாவது தான் நடிப்பு” எனவும் இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

மேலும், அமீர் தற்போது மாயவளை மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். அதே சமயம் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இறைவன் மிக பெரியவன் என்ற திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi