சென்னை : தனுஷ் வற்புறுத்தியதன் காரணமாக தான் அந்த படத்தில் நடித்தேன் என இயக்குனர் அமீர் உண்மையை உடைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் அமீர் ஆரம்ப காலத்தில் இருந்தே படங்களிலும் நடித்து கொண்டு வருகிறார். நடிப்பில் இவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்த திரைப்படம் எது என்றால், அமீர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தை கூறலாம். இந்த படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் அவர் நடித்தது பெரிய அளவில் அவருக்கு நடிகராக வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.
அந்த வரவேற்பை தொடர்ந்து அடுத்ததாக படங்களில் முக்கியமான கதாபாத்திரங்கள் மட்டுமின்றி ஹீரோவாகவும் பல படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் உயிர் தமிழுக்கு என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் அமீர் ஊடகங்களுக்கு கொடுக்கும் பேட்டியில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது தனுஷுடன் மாறன் படத்தில் நடித்த காரணம் பற்றியும், வடசென்னை படத்தில் நடித்தபிறகு வந்த கதைகளை பற்றியும் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய இயக்குனர் அமீர் ” மாறன் படத்தின் கதை பிடித்து விருப்பபட்டு எல்லாம் படத்தில் நடிக்கவில்லை. தனுஷ் எனக்கு கால் செய்து இந்த படத்தில் நடிங்கள் என்று வற்புறுத்திய காரணத்தால் மட்டும் தான் நடித்தேன். நான் முதலில் முடியாது கதை மேல் நம்பிக்கை இல்லை என்று கூறினேன்.
ஆனால், தனுஷ் அண்ணா நீங்க எனக்காக இந்த படத்தில் நடித்து கொடுங்கள் என்று கேட்டார். தனுஷ் அவ்வளவு தூரம் கூறிய காரணத்தால் தான் நான் அந்த படத்தில் நடித்தேன். அதைப்போல தான் மற்ற படங்களிலும் இயக்குனர்கள் என்ன தேடி வந்து நடித்து கொடுங்கள் என்று கூறுவார்கள் அதனால் தான் நடிக்கிறேன். வடசென்னை படத்திற்கு பிறகு அதே போலவே ஒரு 40 கதை என்னை தேடி வந்தது” எனவும் இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.
மாறன் படம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாக பெரிய தோல்வியை சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…