“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
என் மனைவி ஐஸ்வர்யாவைவிட அஜித் சாரிடம்தான் அதிக முறை I LOVE YOU என சொல்லி இருக்கிறேன் என்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.

சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின் ஃபேன் பாயான ஆதிக், தரமான சம்பவத்தை செய்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
படம் வெளியான ஐந்தே நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மேலும், மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், படத்தின் நன்றி தெரிவிப்பு விழாஇன்று சென்னையில் நடைபெற்றது.
நன்றி தெரிவிப்பு விழாவில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்.”அஜித் ரசிகனாக இல்லாமல் இருந்திருந்தால் என்ன ஆகி இருப்பேன் என எனக்கே தெரியவில்லை. ஆனால் அஜித் ரசிகனாக இருந்தால் என்ன நடக்கும் என்பது இப்பொழுது எனக்கு தெரிகிறது.
அவர் என்னை சந்தித்தபோது ஹிட் படமெடுக்காத இயக்குநராக இருந்தேன். அஜித் சாரை பொறுத்தவரை வெற்றி, தோல்வி என எதையும் பார்த்ததே கிடையாது. ஒரு மனிதனாகதான் பார்த்து இருக்கிறார். என் மனைவி ஐஸ்வர்யாவை விட அஜித் சாருக்கு தான் அதிக முறை I LOVE YOU கூறி இருக்கிறேன். என் அம்மா, அப்பாவுக்கு அடுத்த இடத்தில் நீங்கள் தான். I LOVE YOU SO MUCH SIR” என்று கூறியுள்ளார்.