நடிக்க வராத டிடிஎஃப் வாசன்.. கழட்டிவிட்ட மஞ்சள் வீரன் இயக்குநர்.!
மஞ்சள் வீரன்' படத்தில் இருந்து TTF வாசன் நீக்கப்பட்டுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் செல்அம் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரபல யூடியூபர் மற்றும் பைக்கருமான TTF வாசன், அடிக்கடி தனது பொறுப்பற்ற வாகனம் ஒட்டும் நடவடிக்கை காரணமாக கைது செய்யப்படுவார். பின்னர், ஜாமினில் வெளியே வந்து விடுவார்.
இது ஒரு பக்கம் இருக்க, ‘மஞ்சள் வீரன்’ என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக TTF வாசன் அறிமுகமாக உள்ளார் என பல மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இயக்குநர் செல் ஆம் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருபிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், போஸ்டர் வெளியான பிறகு, படம் கிடப்பில் போடப்பட்டது போல் சத்தம் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், மஞ்சள் வீரன் படத்திலிருந்து தற்போது டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டு வேறு ஹீரோ வைத்து படம் எடுக்கப்படவுள்ளது.
TTF வாசனிடம் கால்ஷீட் கேட்ட போது சரியாக வரவில்லை, ஹீரோ ஒத்துழைக்கவில்லை. இதனால், அதே படம் வேறு ஹீரோ நடிப்பில் வெளிவரும் என இயக்குநர் செல்அம் கூறியுள்ளார்.
ஆம், சென்னையில் இன்று திடீரென செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் செல்அம், ” TTF வாசன் என்னுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், சூழ்நிலை ஒத்துவரவில்லை. மேலும், புதிய கதாநாயகன் அக்டோபர் 15-ஆம் நாள் அறிவிக்கப்படுவார்.
படத்தில் இல்லை என்றாலும், தம்பி TTF வாசனுடன் உறவு தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில், “டி.டி.எப். வாசன் தம்பி இப்போதும் அடுத்த சூப்பர் ஸ்டார் தான், ஆனால் அவர படத்துல இருந்து தூக்குறோம். 50 கி.மீ. வேகத்தில் மட்டுமே பைக் ஓட்டும் புதிய கதாநாயகன் இணைந்துள்ளதாக” கூறியுள்ளார்.