விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம்…ஆனா இதெல்லாம் செஞ்சாரு..நடன இயக்குனர் எமோஷனல்!

Published by
பால முருகன்
Vijayakanth : விஜயகாந்த் 3 நாள் தான் பழக்கம் ஆனால் அவர் தனக்கு உதவி செய்தார் என தினேஷ்  மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் உடைய நல்ல மனதிற்கு அவரை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவிற்கு பிறருக்கு உதவிகளை செய்து சாப்பாடு போட்டு பலருடைய பசியை தீர்த்துள்ளார். இதன் காரணமாகவே அவர் உயிரோடு இல்லை என்றாலும் கூட அவரை பற்றி தினம் தினம் நினைத்துக்கொண்டு மக்கள், பிரபலங்கள்,  என அவரை புகழ்ந்து பேசி கொண்டு இருக்கிறார்கள்.

அந்த வகையில், பிரபல நடன இயக்குனரான தினேஷ் மாஸ்டர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது, விஜயகாந்த் தனக்கு 3 நாளில் பழக்கம் ஆகி பல விஷயங்களை செய்ததாக எமோஷனலாக பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு ரமணா படத்தின் நேரத்தில் தான் விஜயகாந்துடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.

கிட்டத்தட்ட அந்த படத்தின் மூலம் அவருடன் 3 நாட்கள் பழகி கொண்டு இருந்தபோதே என்னை அவர் வியக்க வைத்தார். பழகி 3 நாட்கள் தான் இருக்கும் ஆனால், அவர் பல ஆண்டுகள் என்னுடன் பழகியது போல பல விஷயங்களை செய்தார். அவர் ஆரம்ப காலத்தில் நடனம் ஆடிய சீடியை மொத்தமாக எடுத்துக்கொண்டு என்னும் கொடுத்தார்.

கொடுத்துவிட்டு இதில் நான் முன்னாடி படங்களில் ஆடிய முக்கியமான நடனங்கள் எல்லாம் இருக்கிறது. கண்டிப்பாக இதனை எல்லாம் பாரு உன்னுடைய வேலைக்கு நல்ல ஐடியா கிடைக்கும் என்று கூறினார். அவர் ஒரு படத்தின் ஹீரோ நான் அவருடன் பழகியது புதிது எனவே, இதெல்லாம் சொல்லவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை ஆனால், விஜயகாந்த் அதனை செய்தார்.

அதைப்போல, பேரரசு படத்தில் அவருடன் பணியாற்றும் போது ஒவ்வொரு நடனம் காட்சிகளும் முடிந்த பிறகு கம்ப்யூட்டரில் பார்த்துவிட்டு இது அருமையாக இருக்கிறது அது அருமையாக இருக்கிறது என என்னை ரொம்பவே பாராட்டுவார். அவர் பாராட்டும்போது நமக்கு ஒரு விதமான புத்துணர்ச்சியும் வரும். தங்கத்திலும் தங்கம் விஜயகாந்த் தான்” எனவும் தினேஷ் மாஸ்டர் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

மாநகரம் ஸ்ரீக்கு என்ன ஆச்சு? புகைப்படங்களை பார்த்து நொந்து போன ரசிகர்கள்!

நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…

24 minutes ago

பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை புகழாரம்!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…

1 hour ago

“பத்திகிச்சு இரு ராட்ச்சஸ் திரி”! துவைத்தெடுத்த கில் – சாய்! லக்னோவுக்கு இது தான் டார்கெட் !

லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது.   இந்த போட்டியில்…

2 hours ago

அதிமுக – பாஜக கூட்டணியின் தலைமை யார்? விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…

3 hours ago

சர்ச்சை பேச்சு! “மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் “-பொன்முடி

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…

4 hours ago

LSGvsGT : டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு! மிட்செல் மார்ஷ்க்கு பதில் இவர் தான்!

லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது.  போட்டியில்…

4 hours ago