நீங்க தான் டைட்டில் வின்னர்.! ஆடிப்போன குக் வித் கோமாளி டீம்.! உண்மையை கூறிவிட்டாரோ..?
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி “குக் வித் கோமாளி”. இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது.
இதில் ஸ்ருதிகா, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், அம்மு அபிராமி, ரோஷ்ணி , வித்யுலேகா, முத்துக்குமார், சுட்டி அரவிந்த், ஆகியோ போட்டியாளர்களாக கலந்து கொண்டு உள்ளனர்.
வழக்கம் போல தினமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோவை வெளியீட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில், இன்றும் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இந்த ப்ரோமோவில் ” அம்மு அபிராமி, கிராஸ் கருணாஸ், தர்ஷன் இவர்கள் மூவரில் ஒருவருடைய சமையலை சுவைத்த செஃப் வெங்கடேஷ் பட், ‘நீங்க மட்டும் இந்த டிஷ்ஷை இறுதி போட்டிக்கு சமைத்திருந்தால், நீங்க தான் டைட்டில் வின்னர்” என்று கூறுவது போல காட்டப்பட்டுள்ளது. வெங்கடேஷ் பட் இப்படி யாரை சொல்லிருப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் இந்த வாரம் நிகழ்ச்சியை பார்க்க காத்துள்ளனர்.