AK62 படத்தில் இருந்து விலகினாரா விக்னேஷ் சிவன்..? தீயாய் பரவும் புதிய தகவல்.!

Published by
பால முருகன்

அஜித் நடிக்கவுள்ள AK62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக முன்னதாக  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. 

AK62

AK62 Movie
AK62 Movie [Image Source: Twitter ]

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் அடுத்ததாக தனது 62-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக “AK62” என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

AK62 படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன் 

Vignesh Shivan About Ak 62 [Image Source: Twitter ]

AK62 படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது அதிர்ச்சியான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், AK62 கதையில் நிறைய மாற்றம் தேவை என்பதால் படத்திலிருந்து விக்னேஷ்சிவன் தற்காலிகமாக விலகியுள்ளார் என்றும் தனது கனவு படமாக உள்ள அஜித்துடன் இணையும் படத்தை மெருகேற்ற விக்னேஷ் சிவன் நிறைய நேரம் கேட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

AK62 இயக்குனர் யார்..? 

AK 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதாக ஒரு தகவல் பரவி வருவது போல மற்றோரு தகவல் என்னவென்றால், AK62 படத்தை இயக்குனர் விஸ்னு வரதன் இயக்கவுள்ளதாகவும், மகிழ்திருமேனி இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் தீயாய் பரவி வருகிறது.

ajithkumar MagizhThirumeni [Image Source : Twitter]

இதில் கூடுதல் தகவல் என்னவென்றால், AK62படத்தை  மகிழ்திருமேனி  இயக்குவது கிட்டத்தட்ட உறுதி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மை தகவலா அல்லது வதந்தி தகவலா என்பதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

சயிப் அலிகானுக்கு கத்திக்குத்து! ரூ.1 கோடி கேட்டு மிரட்டிய திருடன்..வெளிவந்த பரபரப்பு தகவல்!

மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…

8 hours ago

களைகட்டிய பொங்கல் : அண்ணா உயிரியல் பூங்காவிற்கு 80,000க்கும் மேற்பட்டோர் வருகை!

சென்னை :  பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…

10 hours ago

ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்…பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…

11 hours ago

“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!

மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…

11 hours ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 20 காளைகளை அடக்கி காரை வென்ற அபி சித்தர்!

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…

11 hours ago

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

12 hours ago