விருதுக்காக 80 கோடி செலவிட்டதா ‘ஆர்.ஆர்.ஆர்’ படக்குழு..? மனம் திறந்த தயாரிப்பாளர்.!
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்திருந்தார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.
வசூல் ரீதியாக மட்டுமின்றி படம் பல விருதுகளையும் குவித்தது. குறிப்பாக கடந்த சில நடந்து முடிந்த 95வது ஆஸ்கார் விருது விழாவில் “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு ” பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் வெற்றிபெற்று விருதை வென்றது.
இந்த நிலையில், ஆர்.ஆர்.ஆர் படக்குழு ஆஸ்கர் விருது பெற 80 கோடி செலவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்த தகவல் உண்மையா இல்லை என்று பலரும் குழம்பி வந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் DVV தனய்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” விருதுக்காக நான் எந்த பணத்தையும் செலவிடவில்லை. ஒரு விருதுக்காக யாரும் 80 கோடி ரூபாய் செலவிடமாட்டார்கள். அதில் எந்த பயனும் இல்லை. நாங்கள் செலவு செய்து சென்றதாக பரவும் தகவல் வெறும் வதந்தி தகவல் மட்டும் தான் ” என்று விளக்கமளித்துள்ளார்.