நடிகை த்ரிஷா நடிப்பில் இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘தி ரோடு”. இந்த திரைப்படத்தில் ஷபீர் கல்லாரக்கல்,மியா ஜார்ஜ், மியா ஜார்ஜ், , கல்லாரக்கல், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம்சி எஸ் இசையமைத்துள்ளர்.
இந்த திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பே ரிலீஸ் ஆக இருந்தது. படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையில், படத்திற்கான ப்ரோமோ வீடியோக்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
இதனையடுத்து படம் எப்போது தான் வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், ஒரு வழியாக படம் கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் முதல் இரண்டு நாட்கள் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது.
இதனை தொடர்ந்து அடுத்த சில நாட்களில் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், படத்திற்கான வசூலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, இந்த ‘தி ரோடு” திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை 3.2 கோடி வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்களை வெளியாகியுள்ளது.
படத்திற்கு நாளுக்கு நாள் விமர்சனங்கள் நன்றாக வந்துகொண்டிருப்பதன் காரணமாக படம் வரும் நாட்களில் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…