குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!
இட்லி கடை திரைப்படம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கு தள்ளி செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவிருந்தது. இதில் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாவதற்கு முன்பு வரை இட்லி கடை படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதன்பிறகு குட் பேட் அக்லி டீசர் வெளியாகி முழுவதுமாகவே எதிர்பார்ப்பை பெற்றுவிட்டது.
எனவே, குட் பேட் அக்லி படத்திற்கு வசூல் ரீதியாக பயங்கர ஓப்பனிங் கிடைக்கும் என கூறப்படுகிறது. எனவே, இட்லி கடை படம் ரிலீஸ் தேதி தள்ளி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் தகவல்கள் வெளியானது. அதன்பிறகு பொங்கல் பண்டிகை அன்று போஸ்டர் வெளியிட்டும் ரிலீஸ் தேதியை தனுஷ் உறுதி செய்திருந்தார். இதனையடுத்து, தற்போது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்வது உறுதி என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதற்கான முக்கியமான காரணமே படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுவதுமாக முடியவில்லை என்பது தான். இன்னும் சில காட்சிகள் எடுக்கப்படவேண்டி இருப்பதால் அது எடுக்கமுடியாது சூழல் ஏற்பட்டுள்ளது. தனுஷ் இப்போது வேறொரு படத்தில் பிசியாக இருப்பதால் இட்லி கடை படப்பிடிப்பு முடிய இன்னும் சில நாட்கள் ஆகுமாம். இருப்பினும் ரசிகர்களை காக்க வைக்க கூடாது என்பதால் தான் குபேரா படத்தினை வரும் ஜூன் மாதம் வெளியிட முடிவு எடுத்துள்ளார்.
இந்த படம் வெளியாகிய பிறகு ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஒரு மாதத்தில் இட்லி கடை படத்தினை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்வது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் வெளியாகலாம். இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்ல இது தான் முக்கிய காரணம் மற்றபடி சமூக வலைத்தளங்களில் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் காரணமாக தள்ளி செல்லவில்லை எனவும் சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!
March 4, 2025
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025