கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? : நடிகை ஸ்ருதிஹாசன்
நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவின் நடிகையும், பிரபலமான பாடகியுமாவார். இவர் கமலஹாசனின் மகளாவார். சமீபத்தில், இவர் அளித்த பேட்டி ஒன்றில், ” நடிக்க வேண்டும் என்பது உங்கள் சிறுவயது கனவா, இல்லை உங்கள் பெற்றோர் சினிமாவில் இருந்ததால் இந்த துறைக்கு வந்தீர்களா? என நிருபர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்க்கு பதிலளித்த அவர், கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா? என்ற பழமொழியை சிறு வயதில் இருந்தே கேட்டிருக்கிறேன். அந்த பழமொழிதான் இதற்கு பதில் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், நான் சினிமா குடும்பத்தில் வளர்ந்தேன் என்றும், அவரது முதல் தேர்வு எது என்றால் இசை என்று தான் கூறுவாராம். சினிமா என்னை தத்தெடுத்துக் கொண்டது. மேலும், அவர் தனது தந்தையுடன் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்ற அனுபவங்களை கூறியுள்ளார்.