பழம்பெரும் நடிகையான மனோரம்மாவின் மகன் தூக்க மாத்திரை சாப்பிட்டாரா?
கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமாக பரவி வருவதால், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மது கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால்அனைத்து குடிமகன்களும் மிகவும் திண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்நிலையில், பழம்பெரும் நடிகையான மனோரமாவின் மகன் பூபதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மது கிடைக்காததால் போதைக்காக தூக்க மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.