லியோ படத்தை மிஞ்சியதா GOAT? முதல் நாள் வசூல் விவரம்!!

GOAT திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

GOAT BOX OFFICE

விஜய் படங்கள் வெளியானால் வசூல் ரீதியாக பெரிய அளவில், சாதனை படைக்கும் என்றே சொல்லாம். அதற்க்கு ஒரு உதாரணமாக அவருடைய நடிப்பில் வெளியான லியோ படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 140 கோடி வரை வசூல் செய்து அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்திருந்தது.

அந்த சாதனையை அதற்கு அடுத்ததாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால், லியோ படத்தின் எதிர்பார்ப்புடன் ஒப்பிட்டு பார்க்கையில், GOAT படத்திற்கு எதிர்பார்ப்பு சற்று கம்மியாகத்தான் இருந்தது.

அப்படி இருந்தாலும், GOAT படத்திற்கு அமோகமான வரவேற்பு கிடைத்துள்ள காரணத்தால் நல்ல ஓப்பனிங்கையும் படம் பெற்றிருக்கிறது. படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் மூலம், லியோ படத்தின் முதல் நாள் வசூலை GOAT படம் முறியடிக்க தவறியுள்ளது.

மேலும், GOAT படம் இந்தியாவில் மட்டும் மொத்தமாக 40 கோடி வரையும், தமிழகத்தில் மட்டும் 35 கோடி வரை வசூல் செய்து இந்த ஆண்டு, தமிழ் சினிமாவில் முதல் நாளில் தமிழகத்திலும் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

படம் வெளியாவதற்கு முன்பே BookMyShow-வில் டிக்கெட்கள் புக் ஆனது வைத்து உலகம் முழுவதும் 100 கோடிகள் வரை வசூல் செய்யும் என கணிக்கப்பட்டிருந்தது. எனவே, அதைபோலவே படம் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதால் கண்டிப்பாக வரும் நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்