போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகியுள்ள "கடைசி உலகப் போர்" படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

KadaisiUlagaPor movie

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின் மூலம் இயக்குநராகவும், கவர்ந்தார். அந்த படத்தை தொடர்ந்து இரண்டாவதாக  “கடைசி உலகப் போர்” படத்தினை இயக்கி, தயாரித்து இசையமைத்துள்ளார்.

படங்களில் நடித்தும், இசையமைத்து சேர்த்த பணத்தை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டில் இந்த படத்தின் தயாரிப்புக்கு செலவு செய்துள்ளார். பிரமாண்ட பட்ஜெட் படம் என்பதால் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் செப்டம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் தெரிவித்துள்ள விமர்சனங்களை பற்றி பார்க்கலாம். படத்தை பார்த்த ஒருவர் ” படத்தின் திரைக்கதை மிகவும் அருமையாக இருக்கிறது. ஒரு சில இடங்களில் காட்சி மெதுவாக சென்றாலும், படம் பார்க்கும்போது அது பெரிதாக தெரியவில்லை. படத்தில், ஹிப் ஹாப் ஆதி & நட்டி நடராஜன் கம்போ அருமையாக இருக்கிறது” என கூறியுள்ளார்.

மற்றொருவர் ”  கடைசி உலகப் போர் முதல் பாதியை தொடர்ந்து சிறப்பாக இரண்டாம் பாதி சிறப்பாக இருக்கிறது. படத்தின் உருவாக்கம் மற்றும் கதைக்களத்தில் பெரும் முயற்சிகள் படக்குழு எடுத்துள்ளது. படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் அருமையாக இருக்கிறது. எமோஷனல் காட்சிகள் கொஞ்சம் சரியாக வேலைசெய்யவில்லை. மொத்தத்தில் சுமாரான பொழுதுபோக்கு திரைப்படம்” என கூறியுள்ளார்.

மற்றொருவர் “சராசரியான முதல் பாதி முதல் பாதியும் அதைத் தொடர்ந்து இரண்டாவது பாதியும் சுமாராக இருக்கிறது. படத்தில் நட்டி நடிப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. ஹிப் ஹாப் தமிழன் இசை படத்தின் மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளது. கதை வாரியாக நம்பவில்லை, திரைக்கதையை இன்னும் சிறப்பாக மேம்படுத்தலாம். படத்தில் நடித்தவர்களுடைய நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது துணை கதாபாத்திரங்கள் தங்கள் வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்” என கூறியுள்ளார்.

மற்றொருவர்” ஆதி அண்ணாவின் முயற்சி! மிகவும் ரசித்தேன் & அதிக பட்ஜெட் திரைப்படங்களை விட VFX சிறப்பாக இருந்தது. படத்தில் நடித்தவர்களும் அருமையாக நடித்திருக்கிறார்கள். அண்ணாவின் பிஜிஎம் மூலம் ஒளிரும். #கடைசிஉலகபோர் பார்த்து மகிழ்ந்தேன். திரைப்படத்தை திரையரங்கில் மட்டுமே பார்க்க வேண்டும் மற்றும் OTT இல் பார்க்கக்கூடாது. தயவு செய்து மக்கலே சென்று பாருங்கள்” எனக்கூறியுள்ளார்.

மற்றொருவர் ” படம் சுமாராக இருக்கிறது. படத்தை முழுவதுமாக நட்டி தான் வழிநடத்தி செல்கிறார். ஐடியா சரியாக இருந்தாலும் அதனை முழுவதுமாக திருப்தி படுத்தும் வகையில் எடுக்கமுடியவில்லை” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்